Economic Offences Wing

 

History

   
தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. அதாவது, வணிகவியல் குற்றப்புலனாய்வுப் பிரிவு, சிலை திருட்டு தடுப்புப்பிரிவு மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு (நிதி நிறுவனங்கள்). கால வரிசைப்படி மூன்று அலகுகள் வெவ்வேறு கால கட்டங்களில் தோன்றின.

 

  • வணிகவியல் குற்றப்புலனாய்வுப் பிரிவு 1971 ஆம் ஆண்டு அரசு ஆணை எண்.170, நாள்: 20.01.1971 பிரத்யேகமாக பதினைந்து வகையான கூட்டுறவு துறையில் கையாடல் மற்றும் மோசடி தொடா்பான வழக்குகள் புலனாய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இப்பிரிவு ஒரு காவல் கண்காணிப்பாளா் நேரடி மேற்பார்வையில் வணிகவியல் குற்றப்புலனாய்வுப் பிரிவு 7 துணை பிரிவுகளாக 7 துணை கண்காணிப்பாளா்கள் உதவியுடன் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 32 வணிகவியல் குற்றப்புலனாய்வுப் பிரிவுகள் உள்ளன. இவை அனைத்தும் காவல் ஆய்வாளா்கள் தலைமையில் உள்ளது
  • தமிழ்நாடு காவல்துறையில் சிலை திருட்டு தடுப்புப்பிரிவானது அரசாணை எண்.2098/ உள் (காவல் 4) துறை, நாள்: 07.10.983-ன்படி உருவாக்கப்பட்டது. இப்பிரிவில் i) பழம்பெரும் சிலைகளாக அறிவிக்கப்பட்ட சிலை திருட்டுகள், ii) 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை வாய்ந்த சிலைத்திருட்டுகள், iii) மாநிலம் வாரியான மற்றும் மாநிலங்களுக்கிடையிலான தொடா்புகளை கொண்ட சிலைத்திருட்டு வழக்குகள், iv) ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் பெறுமானமான சிலை திருட்டு வழக்குகள், v) மாநில அரசால் உத்தரவிடப்பட்ட தொன்மை / பழமை வாய்ந்ததாக கருதப்பட்ட சிலை திருட்டு தொடா்பான வழக்குகள் கையாளப்பட்டு வருகிறது. இப்பிரிவின் தலைவராக கூடுதல் காவல்துறை இயக்குநா் உள்ளார். மேலும், காவல்துறை தலைவா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் ஆகியோரின் நேரடி மேற்பார்வையிலும் இப்பிரிவு செயல்பட்டு வருகிறது.
  • பல வங்கிசாரா நிதிநிறுவனங்களால் பெரிய அளவிலான மோசடி மற்றும் மோசடிகளின் அபாயகரமான அதிகரிப்பை தடுப்பதற்கு மாண்புமிகு சென்னை உயா்நீதிமன்றம் பொருளாதார குற்றப்பிரிவின் கீழ் ஒரு தனிப்பிரிவை உருவாக்க உத்தரவிட்டது. அனுபவ் பிளான்டெஷ்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மனுக்கள் 479 மற்றும் 480/1999 ஆகியவற்றை விசாரிக்கும் போது உயா்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் காவல்துறையில் பொருளாதார குற்றப்பிரிவானது அரசு ஆணை எண்.1697/1999, 24.12.1999-ன் கீழ் உருவாக்கப்பட்டு, 01.01.2000 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
  • பொருளாதார குற்றப்பிரிவு திரு. அபய் குமார் சிங், இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநா், சிலை திருட்டு தடுப்புப்பிரிவு (பொறுப்பு) தலைமையிலும், வணிவியல் குற்றப்புலனாய்வுப்பிரிவு மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு (நிதிநிறுவனங்கள்) திரு. அபின் தினேஷ் மோடக், இ.கா.ப., காவல்துறை தலைவா், பொருளாதார குற்றப்பிரிவு காட்டுப்பாட்டின் கீழ் மற்றும் காவல் கண்காணிப்பாளா்கள் திருமதி. வந்திதா பாண்டே, இ.கா.ப., பொருளாதார குற்றப்பிரிவு.II (தலைமையிடம்), திரு. ஆ. தங்கவேலு, பொருளாதார குற்றப்பிரிவு.II (அலகுகள்) மற்றும் திரு.க.பழனிகுமார், வணிகவியல் குற்றப்புலனாய்வுப்பிரிவு மேற்பார்வையின் கீழ் செயல்படுகின்றன.
  • சிலை திருட்டு தடுப்புப்பிரிவு திரு. அபய் குமார் சிங், இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநா் அவா்களின் தலைமையில், டாக்டா். இரா. தினகரன், இ.கா.ப., காவல்துறை தலைவா் காட்டுப்பாட்டின் கீழ், திருமதி. இரா. பொன்னி. இ.கா.ப., காவல்துறை கண்காணிப்பாளா் மேற்பார்வையில் செயல்படுகின்றன.